சீர்காழி அருகே மேலச்சாலை கிராமத்தில் இந்தியன் வங்கி ஏ.டி.எம் உடைப்பு. பல லட்சம் பணம் இருந்த நிலையில் எவ்வளவு பணம் திருட்டு என வங்கி அதிகாரிகள் ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே மேலச்சாலை கிராமத்தில் இங்கி வரும் இந்தியன் வங்கியின் கட்டிடத்திலே ஏடிஎம் செயல்பட்டு வருகிறது, மக்கள் நடமாட்டம் இல்லாத ஒதுக்கு புறமான இடத்தில் இந்த வங்கி செயல்பட்டு வருகிறது. ஆனால் வங்கிக்கோ ஏ.டி.ஏம் இயந்திரத்திற்கோ இரவு காவலாளி கிடையாது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு மூன்று பேர் முகமூடி அணிந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வங்கியும் ஏடிஎம் இயந்திரமும் இயங்கியதால் அலாரம் அடித்தும் பயனற்று போயியுள்ளது, இயந்திரத்தில் இருந்து பல லட்சம் பணம் இருந்ததால் எவ்வளவு திருட்டு போனது எனவு வங்கி நிர்வாக அதிகாரிகள் ஆய்வுக்கு பின்னரே தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தர். சம்பவம் குறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதுடன் வங்கியில் உள்ள சிசிடிவி, டி.வி.ஆர் பதிவை ஆய்வு செய்து வருகின்றனர். மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
No comments